×

ஆதனூர் ஊராட்சியில் பொறியியல் பட்டதாரி பெண் வேட்பாளர் தீவிர பிரசாரம்

வேதாரண்யம், டிச.29: வேதாரண்யம் தாலுகா, ஆதனூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் அனிதா மணிகண்டன். பொறியியல் பட்டதாரியான இவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்பாளர் நேற்று அண்டர்காடு, ஆதனூர், கோவில்தாவு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்றி தீவிரமாக வாக்கு சேகரித்தார். ஊராட்சியில் உள்ள மண்சாலை தார்சாலையாக மாற்றி அமைப்பேன், தெருவிளக்கு, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன், சமுதாயக்கூடம் அரசின் நலத்திட்டங்கள் வெளிப்படையாக நடைபெறவும், ஊழலற்ற நிர்வாகத்தை ஏற்படுத்திடவும், 100 நாள் வேலை திட்டத்தை முறையாக நடைபெறவும் ஏற்பாடு செய்வேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.வேட்பாளரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வேட்பாளரோடு நூற்றுக்கணக்கானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Adhanur Panchayat ,
× RELATED சீர்காழியில் 30 கிலோ பாலித்தீன் பைகள்...