×

நாகர்கோவில்- சென்னை சிறப்பு கட்டண ஒன்வே ரயில் இன்று இயக்கம்

கரூர், டிச. 29: நாகர்கோவில்- சென்னை சிறப்புக்கட்டண ஒன்வே ரயில் இன்று இயக்கப்படுகிறது, கூடுதல் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு சிறப்புக்கட்டண சிறப்பு ரயில் 29ம் தேதி (இன்று) இயக்கப்படுகிறது. இந்த ரயில் நாகர்கோயிலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுகிறது. வள்ளியூர், திருநெல்வேலி (3.55 மணி), கோயில்பட்டி(5 மணி), சாத்தூர்(5.22மணி), விருதுநகர் (5.50 மணி), மதுரை (இரவு 7.25மணி), திண்டுக்கல், திருச்சி (10.15மணி), கரூர் (இரவு 1.30 மணி), நாமக்கல், சேலம் (அதிகாலை 3.45 மணி), காட்பாடி, வழியாக சென்னை சென்ட்ரல் நிலையத்தை 30ம் தேதி காலை 9.45 மணிக்கு சென்றடையும். இதற்கான முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

Tags : Nagercoil ,Chennai ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு