×

வாக்கு எண்ணும் மையத்தில் சார் ஆட்சியர் ஆய்வு

விருத்தாசலம், டிச. 29: கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நல்லூர் ஒன்றிய ஊராட்சிகளில் நடக்கும் வாக்கு பதிவுகளுக்கு பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த தேர்தலுக்கும் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்தை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாமல் இருந்தது.

அதனை நாளைக்குள் பொருத்த வேண்டும். மேலும் வாக்கு பெட்டிகளை வைப்பதற்கு ஒரு அறை மட்டுமே இருந்ததால், அதற்கு கூடுதல் அறை ஒதுக்குமாறும் கூறினார். அலுவலர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியாக செய்யாமல் இருந்ததை கண்டு ஆத்திரமடைந்த சார் ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரை கண்டித்ததோடு, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என உத்தரவிட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஆய்வின் போது திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், வருவாய் ஆய்வாளர் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags : ballot counting center ,
× RELATED தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் இடிதாங்கி பொருத்தம்..!!