×

கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்

திருச்செங்கோடு, டிச.29: மல்லசமுத்திரத்தில் தனியார் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில், விதிமுறை மீறி புகையிலை  பொருட்கள் விற்பனை செய்த 4 கடைகளுக்கு 2,500 அபராதம் விதிக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியார் கல்லூரிகளுக்கு அருகில் பெட்டிக்கடை, டீக்கடை, ஒட்டல் கடை வைத்துள்ளவர்கள், தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. இந்நிலையில், வட்டார சுகாதார மேற்பார்வைாளர் சுப்ரமணியம், சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாசம், சரவணபவன் சுந்தரம் ஆகியோர், நேற்று மல்லசமுத்திரத்தில் தனியார் கல்லூரிகள் அருகேயுள்ள பெட்டிக்கடை, மளிகை கடை, டீ கடை, பேக்கரி ஆகிய கடைகளில் சோதனை நடத்தினர். இந்த கடைகளில் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 4 கடைகளின் உரிமையாளர்களுக்கு ₹2500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags : shops ,colleges ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி