×

தேவசமுத்திரத்தில் சுயேட்சை வேட்பாளர் பரந்தாமன் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி ஒன்றியம் தேவசமுத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிடும், தனியார் பள்ளியில் உடற்கல்வியாசிரியராக பணியாற்றி வரும் பரந்தாமன், தேவசமுத்திரம் பகுதியில் உள்ள அன்னை சத்யாநகர், அக்ரஹாரம், முல்லைநகர், நேதாஜிநகர், மாணிக்கம்கொட்டாய், கோவிந்தன்கொட்டாய், கோனிக்கொட்டாய்உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் ஆட்டோ சின்னத்தில் வாக்கு கேட்டு, தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, டிஜிட்டல் நூலகம், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, விளையாட்டுத்திடல்,  தேவசமுத்திரம் மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம், முதியோர் உதவி தொகை பெற்று தரப்படும். வீடு இல்லாதவர்களுக்கு பசுமைவீடு திட்டத்தில் வீடு, மாற்றுதிறனாளிகளுக்கு உதவிதொகை, காவல்துறை, ராணுவத்தில் சேர மாணவர்களுக்கு உடற்பயிற்சிகூடம் அமைக்கப்படும் எனக்கூறி  வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ராமன், ஞானவேல், எஸ்விவி மண்டப மேலாளர் மனோகரன், நாகேந்திரகுமார், கிருஷ்ணன், ஏழுமலை, செல்வம், பாஷா, ராமமூர்த்தி, சங்கர், வீரப்பன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Tags : candidate ,Paravamman Vote Collection ,Devasamudra ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...