×

வெங்கட்டாபுரம் ஊராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி ஒன்றியம் வெங்கட்டாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆறுமுகசுப்பிரமணி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெங்கட்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனது ஆதராவாளர்களுடன் சென்று ஏணி சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது, வெங்கட்டாபுரம் ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்கள் கிடைக்க வழி செய்வேன். அனைத்து பகுதிகளிலும் தார்சாலை, சிமெண்ட் சாலைகளை அமைக்க நடவடிக்கை, முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருதல், ஏரி, குட்டைகள் மற்றும் ஓடைகள் தூர்வாரப்படும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். மாணவ, மாணவிருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு மைதானம், பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் எனக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது அப்துல்காயும், அக்பர்பாஷா, அன்வர்பாஷா, சவுகத்அலி, அஸ்மத், நாசர், காசிம்பாய், ஜாகீர்உசேன் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags : Congress ,Venkatapuram ,panchayat ,
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது