×

கிருஷ்ணகிரியில் 5 ஒன்றியங்களில் முதற்கட்ட தேர்தலில் 81.43 சதவீதம் வாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி 5 ஒன்றியங்களில் நடந்த முதல்கட்ட வாக்குப்பதிவில் 81.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் (27ம்தேதி) ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட மத்தூர், ஓசூர், காவேரிப்பட்டணம், ஊத்தங்கரை, தளி ஆகிய 5 ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் மத்தூர் ஒன்றியத்தில் 85,514 வாக்காளர்களும், ஓசூர் ஒன்றியத்தில் 1,02,661 வாக்காளர்களும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 233 வாக்குச்சாவடிகளில் 1,38,421 வாக்காளர்களும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 207 வாக்குச்சாவடிகளில் 1,14,625 வாக்காளர்களும், தளி ஒன்றியத்தில் 278 வாக்குச்சாவடிகளில் 1,52,386 வாக்காளர்களும் என மொத்தம் 5 ஒன்றியத்தில் 1046 வாக்குச்சாவடிகளில் 3,01,378 ஆண் வாக்காளர்களும், 2,92,171 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 58 பேரும் என மொத்தம் 5,93,607 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. சில இடங்களில் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
முதற்கட்ட தேர்தலில் இறுதியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு: மத்தூர் ஒன்றியத்தில் 80.56 சதவீதமும், ஓசூர் ஒன்றியத்தில் 79.81 சதவீதமும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 84.67 சதவீதமும், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 81.24 சதவீதமும், தளி ஒன்றியத்தில் 80.20 சதவீதம் என மொத்தமாக 81.43 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. மத்தூர் மற்றும் காவேரிப்பட்டணம்  ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் வாக்கு பதிவு செய்துள்ளனர். 58 மூன்றாம் பாலினத்தவர்களில் 7 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

Tags : Krishnagiri ,election ,unions ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி