×

வாக்குச்சாவடி மையத்தை சுற்றி பிரசார போஸ்டர்கள் அதிகாரிகள் அதிர்ச்சி

திருமங்கலம், டிச.27: திருமங்கலம் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள் அதிர்ச்சியடையும் வகையில் மையத்தை சுற்றி பிரசார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. மதுரை திருமங்கலம் ஆர்டிஒ முருகேசன் திருமங்கலம் ஒன்றிய தேர்தல் அதிகாரியாக உள்ளார். நேற்று ஆர்டிஓ, பிடிஓக்கள் உதயகுமார், சங்கர்கைலாசம், ஒன்றிய பொறியாளர் சோலைமலை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆர்டிஓ முருகேசன் திருமங்கலம் பிகேஎன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் மறவன்குளத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட சென்றனர்.மறவன்குளத்தில் இரண்டு இடங்களில் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கிராமத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பொதுச்சேவை மையத்தில் ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை பார்வையிட்ட தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சியடையும் வகையில் மையத்தை சுற்றி கட்சியினர் அதிகளவில் பிரசார போஸ்டர்களை ஒட்டியிருந்தனர். வாக்குச்சாவடி மையத்திலருந்து 100 மீட்டர் தொலைவிற்கு எந்த பிரசாரமும் செய்யகூடாது என்ற விதிகளை மீறி பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் பிரசாரம் செய்யும் வகையில் சுவர்ரொட்டிகளை போஸ்டர்களாக ஒட்டியிருந்தனர். இதனை கண்ட அதிர்ச்சியடைந்த ஆர்டிஓ முருகேசன் உடனடியாக அவற்றை அகற்ற உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்திலிருந்த அனைத்து போஸ்டர்களும் கிழித்து அகற்றப்பட்டன. இதுகுறித்து ஆர்டிஓ கூறுகையில், ``வாக்குச்சாவடி மையத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவிற்கு வாக்குகள் கேட்கக்கூடாது. பிரசார போஸ்டர்கள் ஒட்டக் கூடாது. மீறி ஒட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றார்.

Tags : polling station ,
× RELATED மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில்...