×

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்திய வாக்குச்சீட்டு

திருமங்கலம், டிச.27: உச்சப்பட்டியை சேர்ந்தவர்களுக்கு 10 கி.மீ தூரம் தாண்டியுள்ள கட்ராம்பட்டி கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைத்து பூத் சிலிப் கொடுக்கப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மதுரை திருமங்கலம் ஒன்றியம் பகுதிகளுக்கு டிச.30ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்காளர்களுக்கு நேற்று பூத்சிலீப் விநியோகம் செய்யப்பட்டது. மிகவும் ஆவலுடன் சிலிப்பை வாங்கிய பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த கிராமத்தை சேர்ந்த 150 பேருக்கும் மேலாக வாக்குச்சாவடி மையம் கட்ராம்பட்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என இருந்தது.

உச்சப்பட்டியிலிருந்து கட்ராம்பட்டி 10 கி.மீ தூரம் தள்ளி அமைந்துள்ளது. திருமங்கலம் யூனியனின் கடைசி ஊர் கட்ராம்பட்டி. இதனையடுத்து கள்ளிக்குடி யூனியன் துவங்கிவிடும். இதனால் 10 கி.மீ தூரம் தள்ளி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது உச்சப்பட்டி கிராமமக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. இதுதொடர்பாக யூனியன் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் பூத்சிலீப் அச்சடிக்கும்போது தவறுதலாக வாக்குச்சாவடி மையத்தின் பெயரை மாற்றி அச்சடித்துள்ளனர்.  எனவே, வழக்கம் போல் உச்சப்பட்டி கிராமமக்கள் உச்சப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியிலேயே வாக்களிக்கலாம் என தெரிவித்தனர். இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : voters ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...