வத்தலக்குண்டுவில் மாநில கூடைப்பந்தாட்டம் ஜன. 14ல் துவக்கம்

வத்தலக்குண்டு, டிச. 27: வத்தலக்குண்டு யங் ஸ்டார்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு 34வது கூடைப்பந்தாட்ட போட்டி ஜனவரி மாதம் 14ம் தேதி துவங்கி 18ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் தொலைதொடர்பு துறை போலீஸ் சென்னை, தஞ்சை, திருச்சி உள்பட பல்வேறு அணிகள் பங்கேற்கின்றன. வெற்றி பெறும் அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசுகளை வழங்க உள்ளார். இப்போட்டியில் பங்கேற்ற அணிகள் பதிவு செய்ய கடைசி நாள் வரும் டிச. 31ம் நாள் ஆகும். பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி போஸ், செயலர், யங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட கழகம்,
மார்க்கெட்தெரு, வத்தலக்குண்டு செல் 9952201601 என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : State Basketball Start ,
× RELATED கொடைக்கானலில் முன்விரோதத்தில் டாக்ஸி...