×

வத்தலக்குண்டு கிறிஸ்துமஸ் விழாவில் கல்வி உபகரணங்கள் வழங்கல்

வத்தலக்குண்டு, டிச. 27: வத்தலக்குண்டு பெத்தானியதெரு புனித சந்தனமாதா ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. ஊர் பெரியதனம் கோவில்பிள்ளை ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். மணியம் செபஸ்தியான் முன்னிலை வகித்தார். நாட்டாமை சாலமன் வரவேற்றார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு- புத்தகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், இருதயராஜ், ராஜசேகரன், கார்மல்ராஜ், வனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமலதாஸ் நன்றி கூறினார்.

Tags : Vattalakundu Christmas Festival ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்