×

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் திமுக, கூட்டணியினருக்கு தீவிர வாக்குசேகரிப்பு

ஒட்டன்சத்திரம், டிச. 27: ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் திமுக, கூட்டணி வேட்பாளர்களுக்கு எம்எல்ஏ அர.சக்கரபாணி, எம்பி வேலுச்சாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக டிச.30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துஒட்டன்சத்திரம், அர.சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் எம்பி வேலுசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர். விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, புதுக்கோட்டை, அம்பிளிக்கை, பெரியகோட்டை, காவிரியம்மபட்டி, ரெட்டியபட்டி, காளாஞ்சிபட்டி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags : voting ,allies ,DMK ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...