×

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்கு எண்ணும் மையத்தில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி

சேலம், டிச.27: இளம்பிள்ளை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் விதிமுறைகளை மீறி கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம், இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தில், தடுப்புக்கட்டைகள் கட்டுவது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. திருவிழாக்கள், அரசியல் கட்சி கூட்டம் உள்பட பல விழாக்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி, இளம்பிள்ளை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பள்ளியை சுற்றி கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அமைத்துள்ளனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : loudspeaker ,center ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்