×

8 ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட தேர்தல் 4.59 லட்சம் பேர் வாக்களிக்க ஏற்பாடு

நாமக்கல், டிச.27:  நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்கட்டமாக நடக்கும் உள்ளாட்சி தேர்தலில், 4 லட்சத்து 59 ஆயிரம் பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதற்காக 893 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 168 வாக்குசாவடிகள் பதட்டமாக வாக்குசாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 8 ஒன்றியங்களில் உள்ள 9 மாவட்ட கவுன்சிலர், 85 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 155 ஊராட்சி மன்ற தலைவர்கள், 994 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் மொத்தம் 3,875 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இன்று நடைபெறும் தேர்தலில் 4.59 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போடுகிறார்கள். வாக்குபதிவுக்கு தேவையான பொருட்கள் அனைத்து வாக்குசாவடிகளுக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 8 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். மொத்தம் 7 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்  தேர்தல் பணிக்கு சென்றுள்ளனர். பதட்டமான வாக்குசாவடியில் கூடுதலாக  போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பாதுகப்பு பணியில், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 160 போலீசார்  மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார்  என 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று போலீசாருக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வாக்குசாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு சென்று பின்னர் பொருட்களுடன் வாக்குசாவடிக்கு சென்றனர். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்சு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 வகையான ஆவனங்களை காட்டி ஓட்டு போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : voters ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில்...