பள்ளிபாளையம் நகராட்சியில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு துவக்கம்

பள்ளிபாளையம், டிச.27: பள்ளிபாளையம் நகராட்சியில் 7வது  பொருளாதார கணக்கெடுக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது. இந்த குழுவினர் கேட்கும் விபரங்களை, பொதுமக்கள் வழங்க  வேண்டுமென, நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு  மேற்கொண்டுள்ள 7வது  பொருளாதார கணக்கெடுக்கும் பணிகள், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் துவங்கியுள்ளது. வீடு வீடாக செல்லும் இந்த  குழுவினர், பொதுமக்களிடம் தேவையாக கேள்விகளை எழுப்பி, தங்கள் செல்போன்  மூலம் டிஜிட்டல் முறையில் தகவல்களை பதிவு செய்து வருகின்றனர்.

பொதுசேவை மைய  பணியாளர்கள் மூலம் நடைபெறும் இந்த பணியில், பொதுமக்களின் மின்சாரம், எரிவாயு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த புள்ளி விபரங்களை கொண்டு மக்களின் பொருளாதார நிலை, அதற்கான திட்டங்களை  மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் பொது சேவை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான  பதில் அளிக்க வேண்டுமென பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: