×

பாஜ வேட்பாளர் சுமதி தீவிர வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி, டிச.27:  கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 12வது வார்டு  பாஜக வேட்பாளர் சுமதி ராதாகிருஷ்ணன் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களிடம் கூறும் போது, என்னை தேர்ந்தெடுத்தால் மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும். செல்வமகள் திட்டம், பிரதம மந்திரி இலவச வீடு அனைவருக்கும் கிடைக்க செய்வேன். 150 நாள் வேலை திட்டம், வருடம் முழுவதும் ₹250 வழங்கப்படும். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டம், ஊக்கத் தொகை ₹6000 பெற்றுத்தரப்படும். 60 வயது பூர்த்தியடைந்த விவசாயிகளுக்கு ஓஏபி திட்டம் கிடைக்க வகை செய்வேன். மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் பெற்றுத்தரப்படும். கிருஷ்ணகிரியில் அமைய உள்ள மருத்துவக்கல்லூரியை நமது பகுதியில் அமைக்கவும், இளைஞர்களின்  வாழ் வாதாரத்தை உயர்த்தப்பாடுபடுவேன் என்ற கோரிக்கையை முன் வைத்து வாக்கு சேகரித்தார். ஒன்றிய தலைவர் திருப்பதி (எ) துரை, ஜான்சிபிரியா, குமரேசன், வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,candidate ,
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...