×

போச்சம்பள்ளியில் வரத்து குறைவால் கத்தரிக்காய் விலை உயர்வு

போச்சம்பள்ளி, டிச.27:  போச்சம்பள்ளி பகுதியில் வரத்து குறைவால் கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளது. போச்சம்பள்ளியில் கத்தரிக்காய், தக்காளி, பாகற்காய், வெண்டை, முள்ளங்கி, உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். சாகுபடிக்கு பின் அருகில் உள்ள உழவர் சந்ைத மற்றும் காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரத்தை விட இந்த வாரம் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. போச்சம்பள்ளி, காரிமங்கலம், ஊத்தங்கரை, அறந்தாங்கி, சேலம் உள்ளிட்ட மாவட்டத்திற்கும் விவசாயிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் கடந்த வாரம் ஒரு கிலோ கத்திரிக்காய் ₹10 முதல் 15 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Pochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...