×

காரிமங்கலத்தில் திமுகவினர் தீவிர பிரசாரம்

காரிமங்கலம், டிச.27:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 3வது வார்டில், திமுக சார்பில் போட்டியிடும், திமுகவின் முன்னாள் இளைஞர் அணியின் துணைசெயலாளர் மாரவாடி முருகன் மனைவி தீபா முருகனை ஆதரித்து, தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் ஜிட்டாண்டஅள்ளி ஆகிய ஊராட்சிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதேபோல் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்கள் தமிழரசி செல்வம், சென்னியம்மாள் குமார், கனகா மாதையன், வள்ளி பெரியசாமி ஆகியோருக்கும் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்விடி கோபால், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரவாடி முருகன், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய பிரதிநிதி விஜய் முருகேசன், இளைஞர் அணி ஹரிபிரசாத், செந்தில், செல்வம், ஆறுமுகம் சலீம், கணேசன், வடிவேல், யுவராஜ் பொன்னு கவுண்டர், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,campaign ,Karaimangalam ,
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...