×

திருவெறும்பூர் ஒன்றியத்தில் 191 உள்ளாட்சி பதவிகளுக்கு 707 பேர் போட்டி

திருவெறும்பூர், டிச.27: திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 211 உள்ளாட்சி பதவிகளில் 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 191 பதவிகளுக்கு போட்டியிடும் 707 பேரில் தலையெழுத்து இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் முடிவாகிறது. உள்ளாட்சி தேர்தல் முதல்கட்டமாக திருவெறும்பூர் ஒன்றியத்தில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை 157 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 620 தேர்தல் அலுவலர்கள் பணியில் உள்ளனர். பணியின் பாதுகாப்புக்காக 250 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் வாழவந்தான்கோட்டை, கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, கொண்டு, பூலாங்குடி, திருநெடுங்களம், தேவராயநேரி, சூரியூர் உள்ளிட்ட 10 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுவரை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்குப்பெட்டி, ஓட்டு சீட்டு, மை, குண்டூசி உள்ளிட்ட 72 உபகரணங்கள் அடங்கிய பெட்டி திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் சித்தா மற்றும் ஆயுர்வேத அலுவலர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக 25ம் தேதியில் இருந்து வரும் 2ம் தேதி காலை வரை திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் தபால் வாக்கு செலுத்துபவர்கள் செலுத்தலாம். இன்று பதிவாகும் வாக்குகள் அடங்கிய பெட்டிகள் குண்டூர் எம்ஐடி கல்லூரியில் வைக்கப்பட்டு 2ம் தேதி காலை முதல் எண்ணும் பணி நடைபெறும். அன்று மாலைக்குள் வேட்பாளர்களின் வெற்றி-தோல்வி தெரிய வரும் அதற்கு முன்கூட்டியே இன்று நடைபெறும் தேர்தல்தான் வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது.

Tags : Government ,
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...