பூதலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு வந்த ஆசிரியர்கள் இரவு வரை காத்திருப்பு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 27: தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் தேர்தல் பணிக்கு வெளியூரிலிருந்து வந்த 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஒதுக்காததால் நேற்று மாலை 6 மணி வரை காத்திருந்தனர். இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (27ம் தேதி) நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு திருச்சி, பேராவூரணி, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பூதலூர் ஒன்றிய அலுவலகத்துக்கு வருமாறு உத்தரவு வழங்கப்பட்டது. இதையேற்று நாங்கள் நேற்று காலை பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்தோம். பூதலூர் ஒன்றியத்தில் 94 உள்ளாட்சி பதவிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பணி செய்ய அழைக்கப்பட்டவர்களை என்ன செய்வதென்று ஒன்றிய அலுவலர்கள் கலெக்டரிடம் கேட்டுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் உத்தரவு கிடைத்ததும் தீர்வு செய்யப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வெளியூரிலிருந்து வந்துள்ள ஆசிரியர்கள் காலையிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருக்கின்றோம் என்றனர். இதில் காத்திருந்த 8 ஆசிரியர்களுக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் புறப்பட்டு தங்களது வீடுகளுக்கு ஏமாற்றத்துடன் சென்றனர்.

Tags : Teachers ,election ,
× RELATED பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு...