×

முத்துப்பேட்டை பேரூராட்சி 17வது வார்டில் சாலை அமைத்த சில வருடங்களில் கற்கள் பெயர்ந்து சின்னாபின்னமானது

முத்துப்பேட்டை, டிச.27: முத்துப்பேட்டை பேரூராட்சி 17வது வார்டில் சாலை அமைத்த சில வருடங்களில் கற்கள் பெயர்ந்து சின்னாபின்னமாகிப்போனதால் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 17வது வார்டு மன்னை சாலையிலிருந்து பிரிந்து தெற்குகாடு பகுதியை கடந்து பைபாஸ் சாலையில் இணையும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த சாலையில் ஏராளமான குடியிருப்புகள், காலனி அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக தெற்குகாடு மாரியம்மன் கோயில் பகுதிக்கும், அதேபோல் கீழநம்மங்குறிச்சி, மேலநம்மங்குறிச்சி, மங்கலூர் ஆகிய பகுதிக்கு செல்லும் மக்கள் கோவிலூர் பைப்பாஸ் சாலையில் போகாமல் இந்த சாலை வழியாக செல்வது வழக்கம்.

இதன் அருகே வனத்துறை அலுவலகம், தனியார் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவிகள் விடுதி, பேருந்து நிறுத்தம் ஆகியவை உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பேரூராட்சி சார்பில் இந்த சாலை சீரமைப்பு பணிகள் நடந்தது. போதிய தரமில்லாமல் சாலை போடப்பட்டதால் சில மாதங்களில் ஜல்லிகள் பெயர்ந்தன. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பெய்த மழைக்கு சாலை முழுவதும் சேதமாகி பள்ளம் படுங்குழியாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வாகன ஓட்டி செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இரவில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் நகர செயலாளர் செல்லத்துரை கூறுகையில்: போதிய தரமில்லாமல் போடப்பட்ட இந்த சாலை தற்பொழுது மக்கள் பயன் படுத்த முடியாதளவில் மாறிவிட்டது. இப்பகுதி மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்து தரவேண்டும் என்றார்.

Tags : Muttupettu Berarchyi Road ,Ward ,
× RELATED மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள...