×

ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருத்துறைப்பூண்டி, டிச.27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வேதை சாலை வரை ஒரே நெடுஞ்சாலையில் தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலையில் இருந்துதான் மன்னார்குடி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஊர் செல்லும் பிரிவு சாலையும் உள்ளது. நகராட்சி தெரு சாலைகளும் பிரிகிறது. இந்த ஒரே சாலையில் தான் வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து போக வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த சாலையில் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருவது வாகனங்கள் எப்படி சென்று வருகிறது என்று வாகன ஒட்டிகளுக்கு தெரியும். நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட போக முடியவில்லை.

சாலை இருபுறமும் உள்ள கடை விளம்பர தட்டிகளாலும் எந்த நேரமும் வாகனங்களில் பொருட்கள் ஏற்றுவது, இறக்குவதாலும் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் நடந்து கூட போக முடியவில்லை. பொதுமக்கள் கோரிக்கையையடுத்து ஆண்டு தோறும் ஒரு முறை நெடுஞ்சாலை, நகராட்சி, வருவாய் துறை, காவல் துறை இனைந்து ஆக்கிரமிப்பு அகற்றுவது வாடிக்கையானது ஒன்று. இது போன்று கடந்த ஜூலை மாதம் நகரில் அக்கிரப்பு அகற்றபட்டது. ஆக்கிரமிப்பு அகற்றியபிறகு தொடர் கண்காணிப்பு இல்லததால் ஆக்கிரமிப்பு மீண்டும் முளைத்து தற்போது அதிகமாகி விட்டது.

இதனால் தினம் தினம் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கபட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தாசில்தார் ராஜன்பாபு கூறுகையில், திருத்துறைப்பூண்டி நகரில் ஆக்கிரமிப்பு அதிகம் இருப்பது குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார் மனு வருவதால் விரைவில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

Tags : Teachers ,Coalition ,Tirupur ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...