புதுக்கோட்டை மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடி அணிந்து மக்கள் பார்த்து வியந்தனர்

புதுக்கோட்டை, டிச.27: புதுக்கோட்டை மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை, பாதுகாப்பு கண்ணாடி அணிந்து பொதுமக்கள் பார்த்து வியந்தனர். பூமிக்கும், சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணம், முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் என 3 வகை உள்ளது. இதில் வளைய சூரிய கிரகணன் தான் நேற்று நிகழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த வளைய சூரிய கிரகணத்தை கான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு தக்க பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொலை நோக்கி அமைக்கப்பட்டு பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் பாதுகாப்பு கண்ணாடிகளும், சூரிய கிரகணம் குறித்த விளக்க கையேடும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி, சென்னை முன்னாள் மேயர் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., போலீஸ் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், மனவாளன் உள்பட பலர் கலந்து கொண்டு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பாதுகாப்பு கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

பொன்னமராவதி:
பொன்னமராவதி பகுதியில் வளைவு சூரிய கிரகணத்தை கண்ணாடி அணிந்து சிறுவர்கள் பார்த்தனர். பொன்னமராவதி அறிவியல் இயக்கம் சார்பில் பொன்னமராவதி, மணப்பட்டி, ஆலவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறுவர்கள் சூரிய கிரகண நிகழ்வினை பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கண்ணாடி மூலம் பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். இதேபோல் சடையம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சூரிய கிரகண நிகழ்வுகளை மாணவர்கள் பார்த்தனர். இதில் வட்டாரக்கல்வி அலுவலர் ராஜாசந்திரன், தலைமையாசிரியர் பழனிச்சாமி, முள்ளிப்பட்டி தலைமையாசிரியர் பெரியதம்பி, காடம்பட்டி தலைமையாசிரியர் அழகப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED வாகனஓட்டிகள் கோரிக்கை பெருநாவலூர்...