×

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 6 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

நாகை, டிச.27: நாகை மாவட்டத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு 6 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோயில், கொள்ளிடம், தலைஞாயிறு, கீழையூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, குத்தாலம் உள்பட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இன்று (27ம் தேதி) முதல் கட்டமாக நாகை, திருமருகல், கீழ்வேளூர், சீர்காழி, செம்பனார்கோயில், கொள்ளிடம் ஆகிய 6 ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 242 ஊராட்சி தலைவர்கள், 1,884 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 116 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு உரிய மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய வாக்காளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 83,113 வாக்காளர்களும், திருமருகல் ஒன்றியத்தில் 87,521 வாக்காளர்களும், கீழ்வேளூர் ஒன்றியத்தில் 70, 661 வாக்காளர்களும், சீர்காழி ஒன்றியத்தில் 1,28,768 வாக்காளர்களும், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் 1,77,443 வாக்காளர்களும், கொள்ளிடம் ஒன்றியத்தில் 1,37,871 வாக்காளர்களும் என்று மொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்கள் 2,60,470ம் பேரும், பெண் வாக்காளர்கள் 2,65,463 பேரும், இதர வாக்காளர்கள் 10 பேரும் என்று மொத்தம் 5,25,943 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக நாகை ஊராட்சி ஒன்றியத்தில் 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 136 வாக்குப்பதிவு மையங்கள் 47 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 8 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் 155 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் 66 இடங்களில் 139 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 வாக்குப்பதிவு மையம் பதட்டம் நிறைந்தவை. சீர்காழி ஒன்றியத்தில் 86 இடங்களில் 192 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் 114 இடங்களில் 269 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டம் நிறைந்தவையாகும். கொள்ளிடம் ஒன்றியத்தில் 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 103 இடங்களில் 215 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மொத்தமாக 6 ஊராட்சி ஒன்றியங்களில் 83 மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 490 இடங்களில் 1106 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒற்றை வாக்குச்சாவடி 324, இரட்டை வாக்குச்சாவடி 782 ஆகும். 186 இடங்களில் 45 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடி மையங்களை கண்காணிக்க 130 வாக்குச்சாவடிகளில் 85 நுண்பார்வையாளர்களும், 138 வாக்குச்சாவடிகளில் வெப்கேமிரா கண்காணிப்பும், 134 வாக்குச்சாவடிகளில் வீடியோ கிராபி காண்காணிப்பும் உள்ளது. 8,524 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிபுரியவுள்ளார்கள்.

Tags : polling booths ,Naga District Local Council ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு