×

விடுமுறை எதிரொலியால் மதுபான கடைகளில் சரக்கு விற்பனை அமோகம்

நாகை, டிச.27: நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு மதுபானங்கள் அமோகமாக விற்பனை நடந்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நேற்று (25ம் தேதி) மாலை 5 மணி முதல் நாளை(27ம் தேதி) மாலை 5 வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 99 டாஸ்மாக் கடைகளில் மதுபானம் அமோகமாக விற்பனை நடந்துள்ளது. கடந்த 23ம் தேதி ரூ.1 கோடியே 60 லட்சத்து 96 ஆயிரத்திற்கும், 24ம் தேதி ரூ-.1 கோடியே 96 லட்சத்து 12 ஆயிரத்து 110க்கும் விற்பனை நடந்துள்ளது. அதே போல் 25ம் தேதி ரூ.1 கோடியே 86 லட்சத்து 89 ஆயிரத்திற்கு விற்பனை நடந்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வரை விற்பனை நடைபெறுவது வழக்கம். தொடர்ச்சியாக விடுமுறை மற்றும் விழாக்காலங்கள் என்பதால் நாகை மாவட்டத்தில் மதுபான விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...