×

அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்கு சாவடிகளுக்கு ஓட்டு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

அரவக்குறிச்சி, டிச. 27: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் 188 பதவிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றது. வாக்களர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி ஒன்றியத்தில் முதல் கட்டமாக நாடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலருக்கு 1. ஒன்றிய குழு உறுப்பினருக்கு 11, பஞ்சாயத்து தலைவருக்கு 20, பஞ்சாயத்து உறுப்பினருக்கு 156 என 188 உள்ளாட்சி பதவிகளுக்கு 268 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் 114 வாக்குச்சாவடிகளில் 906 அலுவலர்கள் பணியற்றுகின்றனர். 114 வாக்குச்சாவடிகளுக்கும் ஓட்டுப் பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டு வாக்கு பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

Tags : Arawakurichi Union ,polling booths ,
× RELATED மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குசாவடிகளில் நாளை மறுவாக்குபதிவு