×

நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் ரூ.4 லட்சத்தில் புதிய இயந்திரங்கள் பேராயர் தேவசகாயம் இயக்கி வைத்தார்

நாசரேத், டிச. 27:  நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான புதிய இயந்திரங்களை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம்  இயக்கி வைத்தார். நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளியில் நாசரேத் தொழிலதிபர் தேவதாஸ் டேனியல் மற்றும் இகராசி மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 2 புதிய இயந்திரங்களின் பிரதிஷ்டை விழா, பள்ளி தொழிற்கூடத்தில் நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் புதிய இயந்திரங்களை இயக்கி வைத்து தலைமை உரையாற்றினார். நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்தார்.

பள்ளி தாளாளர் பைசோன் ஞானராஜ் வரவேற்றார். நாசரேத் தொழிலதிபர் தேவதாஸ் டேனியல், ஆசிரியர் எட்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் நாசரேத் ஆர்ட் தொழிற்பயிற்சி மைய மேலாளர் அகஸ்டின், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சந்திரன், தூயயோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாந்தகுமாரி, குருவானவர்கள் இஸ்ரவேல் ஞானராஜ், ரொனால்டு, நாசரேத் மர்காஷிஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் லயன் புஷ்பராஜ், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஆண்ட்ரூஸ், செல்வின், எட்வர்ட் கண்ணப்பா, தினேஷ், பள்ளி பழைய மாணவர் சங்கத் தலைவர் இம்மானுவேல், பள்ளி ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆர்ட் தொழிற்பள்ளி முதல்வர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

Tags : Devasakayam ,Nazareth Art School ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களின்...