×

பணிக்கன்குடியிருப்பு சந்தியடி மாடசாமி கோயில் கொடை விழா

நாகர்கோவில், டி.ச 27: நாகர்கோவில் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பு சந்தியடி மாடசாமி கோயில் கொடை விழா நேற்று(26ம் தேதி) தொடங்கியது. இந்த திருவிழா நாளை(28ம் தேதி) வரை நடக்கிறது. நேற்று காலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், இரவு 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு பூஜை, 1 மணிக்கு பெருமாள் சாமிக்கு பூஜை ஆகியவை நடந்தது. 1.30 மணிக்கு குருசாமிக்கு பூஜை நடந்தது.  இன்று(27ம் தேதி) காலை 6 மணிக்கு மங்கள இசை, 9 மணிக்கு வில்லிசை, பகல் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 8 மணிக்கு தீபாராதனை, 9.30 மணிக்கு மகுட ஆட்டம், நள்ளிரவு 2 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. நாளை(28ம் தேதி) காலை 6 மணிக்கு மங்கள இசை, 9 மணிக்கு மகுட ஆட்டம், 11 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம்1 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : Madasamy Temple Donation Ceremony ,
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு