×

விகேபுரம் நகைக்கடை கொள்ளையில் 2 பேர் கைது 35 பவுன், 2 பைக்குகள் பறிமுதல்

நெல்லை, டிச. 27: விகேபுரம் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 35 பவுன் நகை, இரு பைக்குகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம், விகேபுரம் வைத்திலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் பிச்சமுத்து மகன் ராஜ்(45). இவர் வி.கே.புரம் மெயின்ரோடு மூன்று ேலம்ப் பஸ் நிறுத்தம் அருகே ரத்னா ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த நவ.5ம்தேதி இரவு மர்மநபர்கள், கடையை உடைத்து 600 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். விகேபுரம் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தலைமையில் எஸ்ஐக்கள் மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படையினர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதனிடையே நாமக்கல்லில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் தெரிய வந்தது. அங்கு சென்ற தனிப்படையினர் மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாண்டித்துரை (30), நாகர்கோவிலை சேர்ந்த கருவாடு மாரியப்பன்(35) ஆகிய இருவருக்கும் விகேபுரத்தில் ராஜ் நகைக் கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, 35 பவுன் நகை, இரு பைக்குகள், இரு செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : bounces ,jewelery shop ,Vikepuram ,
× RELATED கடையம் அருகே வெவ்வேறு விபத்து மெக்கானிக் உள்பட இருவர் பலி