×

வள்ளியூர் டி.ஜே.ஆர். ரெஸ்டாரண்டில் கிறிஸ்துமஸ் விழா

வள்ளியூர், டிச.27:  வள்ளியூர் டி.ஜே.ஆர். ரெஸ்டாரண்டில் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.8 முதல் ஜனவரி 1ம்தேதி வரை புதிதாக பிரண்ட்ஸ் டூ டீரிட் சிறப்பு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மதியம் 12 முதல் மாலை 4 மணி வரை ஒருவர் ஆர்டர் செய்த உணவு அவரது நண்பருக்கு கொடுக்கப்படும். இச்சிறப்பு சலுகையின் மூலம் ஒருவர் சாப்பிட்டதற்கு மட்டும் பில் செலுத்தினால் போதும். நண்பர் சாப்பிட்ட உணவுக்கு பணம் செலுத்த தேவையில்லை.

மேலும் கப்பிள் டின்னர் சிறப்பு சலுகையின் மூலம் இரவு 7 முதல் 11 மணி வரை கணவன்-மனைவி சாப்பிடும் போது ஒருவர் சாப்பிட்டதற்கு மட்டும் பணம் செலுத்தினால்  போதும். இந்த சிறப்பு தள்ளுபடி வசதி செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் சிறப்பு சலுகையில் பங்கேற்ற வாடிக்கையாளர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைதி அன்பு இல்லத்தின் நிர்வாகி அன்புசெல்வன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். பின்பு அமைதி இல்லத்தில் உள்ள 50 குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டி.ஜே.ஆர் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தேவேந்தரன் செய்திருந்தார்.

Tags : restaurant ,
× RELATED இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால்...