×

இரவு 10 மணிக்கு மேல் கிறிஸ்துமஸ் விழாவில் ஒலிப்பெருக்கி பயன்படுத்திய போதகர்கள் மீது வழக்கு

நாகர்கோவில், டிச.27: குமரி மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி வைத்து கிறிஸ்துஸ் விழா கொண்டாடியது தொடர்பாக போதகர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவுசெய்து செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிறிஸ்துஸ் விழா ஊர்வலங்கள், குடில்கள் அமைத்தும் விழாக்கள் நடைபெற்றன. தற்போதும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடில்களை காண ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தக்கலை அருகே வட்டம் பெரியநாயகி சர்ச் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி இரவு 2.30 மணி வரை அதிகமான எண்ணிக்கையில் ஒலி பெருக்கிகள் வைத்து அளவுக்கு அதிகமான சத்தம் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தக்கலை சப் இன்ஸ்பெக்டர் சிதம்பரதாணு அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வட்டம், பெரியநாயகி சர்ச் போதகர்கள் ஜெலஸ்டின் ஜெரால்டு, சகாய ஸ்டாலின் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதனை போன்று கருங்கல் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது எட்டணி பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அனுமதிக்கப்பட்ட இரவு 10 மணிக்கு மேல் அனுமதியின்றி ஒன்று கூடி அரசு அதிகாரியின் நிபந்தனையை மீறி ஒலி பெருக்கியில் நிர்ணயித்த ஒலி அளவை விட அதிகமான சத்தத்துடன் ஒலி எழுப்பியதாக எட்டணி பகுதியை சேர்ந்த அர்ஜூன், விபிஸ்ராஜ், ரதீஷ், அபிலாஷ், ஜெனிஸ், ஜெனீஸ் மற்றும் சவுண்ட் சர்வீஸ் நடத்தியவர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பாக ஆம்பிளிபயரையும் போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இதனை போன்று அருமனை போலீசாரும் அளவுக்கு அதிகமான சத்தத்துடன் ஒலி பெருக்கி பயன்படுத்தியது, போக்குவரத்து இடையூறுடன் கிறிஸ்துமஸ் விழா நடத்தியதாக வழக்குபதிவு செய்திருந்தனர். கிறிஸ்துமஸ் விழா நடத்தியவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : pastors ,
× RELATED கோடியக்கரை சரணாலயத்தில்...