×

வாக்குசாவடி மையங்களுக்கு தளவாட பொருட்கள் வந்து சேர்ந்தது

திருப்பூர், டிச.27:திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனூர், தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதற்கட்டமாகவும், மற்றும் 30ம் தேதி அவிநாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இரண்டாம் கட்டமாக என தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வுசெய்ய தேர்தல் நடைபெறுகிறது.இதை தொடாந்து, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் அமைந்துள்ள 11 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள 115 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பெட்டிகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட தளவாடப்பொருட்களை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொருட்களை பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லுமாறும், இன்று அதிகாலை அந்த பொருட்கள் வாக்குசாவடி மையத்தில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக தயார் நிலையில் இருக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், செயற்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலசுப்ரமணியன், திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, செல்வராஜ் மண்டல அலுவலர்கள், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : polling stations ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...