×

பந்த் தள்ளி வைப்புக்கு வர்த்தக சபை வரவேற்பு

புதுச்சேரி, டிச. 27: புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மிக முக்கிய விழா காலங்களில் நடைபெறும் வணிகத்தையே புதுச்சேரி தொழில் மற்றும் வணிகப்பெருமக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், 27ம் தேதி (இன்று) நடைபெற இருந்த முழு அடைப்பு தொழில் மற்றும் வணிகப்பெருமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து புதுச்சேரி வர்த்தக சபை மற்றும் பல்வேறு வணிகர் சங்கங்கள் ஒருங்கிணைந்து முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து முழு அடைப்பை தள்ளிவைத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்று முழு அடைப்பு போராட்டத்தை தள்ளி வைத்திட நடவடிக்கைகள் எடுத்த முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு புதுச்சேரி வர்த்தக சபை சார்பில் நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.அப்போது துணை தலைவர் சேகர், பொதுச்செயலாளர் தணிகாசலம், இணை பொதுச்செயலாளர் தேவக்குமார், பொருளாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Chamber of Commerce ,
× RELATED தமிழகம் முழுவதும் கடைகள் இயங்கும்...