×

காரைக்கால் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் கிராமத்தில் களப்பயணம்

காரைக்கால், டிச. 27: காரைக்கால்  அரசு பாலிடெக்னிக்  மாணவர்கள் ஐஐசி, தர மேம்பாட்டு மையம் மூலம்  கூல்குடிச்ச அக்ரகாரம் கிராமத்தில் களப்பயணம்  மேற்கொண்டனர். அங்குள்ள சமத்துவ கூடத்தில்  மாணவர்கள், கிராம மக்களிடையே ஒருங்கிணைந்து தரம்  மேம்பாடு மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தினர். தொடர்ந்து அக்கிராமத்தில் மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
மேலும்  கல்வியின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் கிராம மக்களிடையே எடுத்துக் கூறினர்.

இக்கல்லூரி விரிவுரையாளர்கள் மண்புழு உரம் மேற்கொள்ளுதல் மற்றும் பிரதம மந்திரியின் அடல் பென்ஷன் யோஜனா,   ஜோதி பீமா யோஜனா,  சாக்ஷி பீம யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி கிராம மக்களிடையே எடுத்துரைத்தனர். மேலும் மாணவர்கள் கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கினர்.  முடிவில் மாணவர்கள் களப்பயணம் குறித்தான  அறிக்கை தயார் செய்தனர். கல்லூரி முதல்வர் சந்தானசாமி அறிவுறுத்தலின்படி  தர மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், துறை தலைவர் வேலாயுதம் முயற்சியில் களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் தாமரை, மேக்ஸ்வெல் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Polytechnic ,Karaikal ,village ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையமான அரசு...