×

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் அறிவிப்பு

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் (17ம் தேதி) நேர்காணல் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் (17ம் தேதி) மாலை 3 மணியளவில் மாமண்டூர் எஸ்கே மகாலில் நேர்காணல் நடத்தப்படும்.தெற்கு மாவட்ட  ஊரக உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் காஞ்சிபுரம், உத்திரமேருர், வாலாஜாபாத், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், லத்தூர், சித்தாமூர், திருக்கழுக்குன்றம் (தெற்கு) ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்,  ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு விருப்ப மனு அளித்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம். கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் விருப்ப மனு அளித்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். ஆதரவாளர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது….

The post ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நாளை மறுநாள் நேர்காணல்: மாவட்ட செயலாளர் க.சுந்தர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : District Secretary ,K. Sundar ,Kanjipur ,Kanjipuram South District ,Dinakaraan ,
× RELATED உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றிய...