×

நபர்களை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர், டிச. 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன்(40). இவர் கடந்த 10 வருடமாக  கட்டகோபுர வீதியில் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் தீபாவளி, ஏலசீட்டு மற்றும் குலுக்கல்சீட்டு ஆகியவை கடந்த 7 வருடமாக நடத்தி வருகிறார். இதேபோல் இந்த வருடம் சுமார் 13,000 நபர்களிடம் தீபாவளி சீட்டுகளை 150க்கும் மேற்பட்ட ஏெஜண்டுகள் மூலமாக வசூலித்த பணம் சுமார் 12 கோடி ரூபாயை சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டார். இதனை கேள்விப்பட்ட பொதுமக்கள் முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.   இதனையடுத்து திருக்கோவிலூர் காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முரளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி எஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மகேஷ் தலைமையில் ஆய்வாளர் ரத்தினசபாபதி, உதவி ஆய்வாளர்கள் திருமால், நரசிம்மஜோதி, பிரபாகரன் மற்றும் போலீசார்  3தனிப்படை அமைத்து தலைமறைவான முரளி கிருஷ்ணனை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்பிலான 1கிலோ 185 கிராம் தங்க நகை, 16 கிலோ வெள்ளி நகை மற்றும் சொகுசு

கார் ஆகியவை பறிமுதல் செய்தும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி, மாமனார் ஆகியோரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் நேற்று காலை பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் 5 முனை சாலையில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீபாவளி சீட்டு மோசடி செய்த முரளியிடம் சரியாக விசாரணை நடத்த கோரியும், அவருடைய சொத்துகளை பறிமுதல் செய்யகோரியும், அவருக்கு ஆதரவாக செயல்படும் முக்கிய பிரமுகர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags : arrest ,persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...