×

உப்பட்டியில் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பந்தலூர், டிச. 27: பந்தலூர் அருகே உப்பட்டியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.    மத்திய பா.ஜ. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் உப்பட்டி பஜாரில் கண்டனம் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் பேரணியை மா.கம்யூ. வேலாயுதம் துவக்கி வைத்தார். முஸ்லிம் லீக் கட்சி அலி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். தி.மு.க.வினர் வக்கீல் சிவசுப்ரமணியம், தென்னரசு, மூர்த்தி, சுந்தர், மா.கம்யூ. ரமேஷ், பு.இ.மு. நிர்வாகிகள் மூர்த்தி, இளங்கோ, வி.சி.க புவனேஷ்வரன், காங்கிரஸ்  ஞானசேகர், உப்பட்டி வளர்ச்சி குழு தலைவர் மத்தாய், முஸ்லிம் லீக் முசிப், செய்துமுகமது உள்ளிட்ட அனைத்து கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூடலூர்:  குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் பார்வுட் பஜார் தபால் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ரகுமான் தரிமி தலைமை தாங்கினர். மேலும் நியூ ஹோப் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கண்டன ஆர்ப்பாட்டத்தை ஐயப்ப சேவா சங்க மாவட்ட துணை தலைவர் மனோகரன் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் சகாதேவன், தி.மு.க ஓவேலி பேரூர் கழகம் சின்னவர், மா.கம்யூ. குஞ்சு முகமது, நாம்தமிழர் வேலாயுதம், அ.ம.மு.க சாஜி, அஇதிமுக அனிபா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...