×

நஞ்சுண்டாபுரம் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளருக்கு வரவேற்பு

பெ.நா.பாளையம், டிச.27: கோவை அருகே வாக்கு சேகரிக்க சென்ற பெண் வேட்பாளரை கிராமத்து மக்கள் அனைவரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். சின்னதடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளர் கார்த்திகேஸ்வரி பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவராக இருந்த சமூக சேவகர் சுந்தர்ராஜனின் மனைவி. இவர் சோமையனூர் பகுதியில் தனது கணவருடன் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அந்த கிராமத்தில் இருந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கார்த்திகேஸ்வரிக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். அவர்களிடம் தொடர்ந்து பணியாற்ற பூட்டு சாவி சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும் என்று கார்த்திகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.

Tags : nominee ,
× RELATED மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை...