×

பஸ்களுக்கு தனி வழித்தடம் கேட்டு கணியூர் டோல்ேகட்டை ஓட்டுநர்கள் முற்றுகை

சோமனூர், டிச.27: சோமனூர் அடுத்த கணியூர் டோல்கேட்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கு தனி வழித்தடம் கேட்டு கணியூர் சுங்கச் சாவடியை ஓட்டுநர்கள் நேற்று முற்றுகையிட்டனர். செங்கப்பள்ளி முதல் நீலம்பூர் வரை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐவிஆர்சிஎல் என்ற தனியார் நிறுவனத்தின் ஆறு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான டோல்கேட் கருமத்தம்பட்டியை அடுத்த கணியூரில்  மட்டும் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட்டில் தினசரி கட்டணம் செலுத்தியும், மாதாந்திர அடிப்படையில் கட்டணம் செலுத்தியும் வாகனங்கள் செல்கிறது. இதற்கிடையே, தற்போது இந்தியா முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் விரைவாக செல்ல பாஸ்டேக் வசதியை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந் நிலையில், கணியூர் டோல்கேட்டில் முக்கிய அரசு வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு என டோல்கேட்டில் தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல ஒரு வழி அமைத்து தரவேண்டும் எனக் கோரி ஓட்டுநர்கள் கணியூர் டோல்கேட்டை நேற்று முற்றுகையிட்டனர். அனைத்து வாகனங்களும் மாறி மாறி வழிகளில் வருவதால் காலதாமதம் ஏற்படுவதுடன் பஸ்களை உரிய நேரத்தில்  செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், பஸ்களுக்கு என பாஸ்டேக் வசதி இல்லாமல் தனி வழி ஒன்று இருபுறமும் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் வலியுறுத்தினர். அதற்கு டோல்கேட் நிர்வாகம் பரிசீலனை செய்வதாக கூறியதை அடுத்து ஓட்டுநர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ganikyoor ,
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி