×

கோவை அருகே 12 அடி நீள ராஜநாகம் மீட்பு

கோவை, டிச. 27: கோவை பூண்டி அடுத்த முள்ளாங்காடு அருகே சாலையில் சென்ற 12 அடி நீளம் ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனத்தில் விடுவித்தனர்.  கோவை பூண்டி செல்லும் வழியில் முள்ளாங்காடு உள்ளது.  போளூவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில், நேற்று சாலையோரத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். மாவட்ட வனஅலுவலர் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனவர் கார்த்திக்ராஜா தலைமையிலான வனக்குழுவினர் ராஜநாகத்தை பிடித்தனர். பின்னர், தமிழக, கேரள வனஎல்லைப்பகுதியில் அடர்ந்த வனத்தில் பாம்பை விடுவித்தனர்.  இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “ராஜநாகத்தின் விஷம் மிகவும் வீரியம் கொண்டது. பிடிப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளம் இருக்கும். பாம்பு பிடி நபர்களின் மூலம் பாம்பு பிடிக்கப்பட்டு அடர்ந்த வனத்தில் விடுவிக்கப்பட்டது” என்றனர்.


Tags : Coimbatore ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு