×

வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

கும்மிடிப்பூண்டி, டிச. 27: கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் சார்பில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை ஒட்டி பயிற்சி மைய நிர்வாகி நரேஷ்குமார், சமூக ஆர்வலர்கள் குமார், மனோஜ், தா.விக்னேஷ் உள்ளிட்டோர் கும்மிடிப்பூண்டி பஜாரில் பொதுமக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அதில் வாக்களிக்க வேண்டிய முறைகள் குறித்தும், எந்தெந்த பதவிகளுக்கு எந்த வண்ண வாக்குசீட்டு உள்ளிட்டவை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.மேலும், வீடு வீடாக சென்று முதல் தலைமுறை வாக்காளர்களை சந்தித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கே வெற்றியை நிர்ணயிக்கக்கூடியது. அதனால், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க  வேண்டும்  என்றும், வாக்கை விற்க கூடாது என்றும், யாருக்கு வாக்களித்தால் காந்தி கண்ட கிராம சுயராஜ்யம் அமையப் பெறும் என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். கும்மிடிப்பூண்டியில் அனைத்து கிராமங்களிலும் இளைஞர்களோடு வீடு வீடாக சென்று அனைவரும் கட்டாயம் வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : voters ,house ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...