×

20 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்

சேலம், டிச.25: சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு, 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் 2ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கென 20 ஒன்றியங்களிலும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில், சுமார் 3,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வ.எண்.   ஊராட்சி ஒன்றியம்  வாக்கு எண்ணும் மையம்
1.     சேலம்                                              தளவாய்ப்பட்டி காயத்ரி மேல்நிலைப்பள்ளி.
2.    வீரபாண்டி                                      பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் பள்ளி.
3.        பனமரத்துப்பட்டி                                மல்லூர் அரசு ஆண்கள் மாதிரிப்பள்ளி.
4.       அயோத்தியாப்பட்டணம்         வைஷ்யா கல்லூரி.
5.    வாழப்பாடி                                         வாழப்பாடி செயின்ட் மைக்கேல் மெட்ரிக் பள்ளி.
6.    ஏற்காடு                                               ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி.
7.     பெத்தநாயக்கன்பாளையம்               பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் பள்ளி.
8.    ஆத்தூர்                                              ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
9.    கெங்கவல்லி                                   கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
10.    தலைவாசல்                                     மணிவிழுந்தான் தெற்கு, மாருதி மேல்நிலைப்பள்ளி.
11.    கொளத்தூர்                                        கொளத்தூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளி.
12.     நங்கவள்ளி                                         நங்கவள்ளி கைலாஷ் கலை, அறிவியல் கல்லூரி.
13.      மேச்சேரி                                              மேச்சேரி கைலாஷ் காவேரி பொறியியல் கல்லூரி.
14.    தாரமங்கலம்                                      தாரமங்கலம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி.
15.    ஓமலூர்                                             ஓமலூர்  பத்மாவணி கலை, அறிவியல் கல்லூரி.
16.         காடையாம்பட்டி                       காடையாம்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாலயா பள்ளி.
17.    சங்ககிரி                                            சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
18.    இடைப்பாடி                                      இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.
19.     கொங்கணாபுரம்                              கொங்கணாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
20.     மகுடஞ்சாவடி                                   மகுடஞ்சாவடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.


Tags : Voting Counting Centers ,locations ,
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு