காரைக்குடியில் வள்ளுவர் பேரவை விழா

காரைக்குடி, டிச. 25: காரைக்குடியில் வள்ளுவர் பேரவையின் ஆண்டுவிழா நடந்தது. செயலாளர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் வரவேற்றார். ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் சேவியர்அந்தோணிராஜ் தலைமை வகித்தார். கரூர் பால்பண்னை உரிமையாளர் பழநியம்பதி முன்னிலை வகித்தார். வித்யாகிரி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமமாலினிசுவாமிநாதன் பரிசுகளை வழங்கினார். குபேரர் கோவில் நாச்சியப்பன், ஆசிரியர் ராமன், பேராசிரியர் சேவற்கொடியோன், தென்றல் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் ஹரிஹரன், தொழிலதிபர் பரணிபாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட, மாநில அளவில் விருது பெற்ற மாணவி வர்ஷினிக்கு இளம் எழுத்துச்சுடர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் செயம்கொண்டான் எழுதிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. துணைத்தலைவர் முனைவர் பிரகாஷ்மணிமாறன் நன்றி கூறினார்.

Related Stories:

>