×

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு

விழுப்புரம், டிச. 25:  தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நகர திமுக கட்சி அலுவலகத்திலிருந்து மாவட்ட செயலாளர் பொன்முடி எம்எல்ஏ தலைமையில் அமைதி ஊர்வலமாகச் சென்ற நிர்வாகிகள் விழுப்புரம் தலைமை தபால் நிலையம் அருகிலுள்ள  தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட பொருளாளர் புகழேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், துணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றியச் செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டு ராஜா, பிரபாகரன், பேரூராட்சி செயலாளர்கள் ஜீவா, சிவா, நகர நிர்வாகிகள் புருசோத்தமன், அணி நிர்வாகிகள் தினகரன், கபாலி, இளங்கோ, பாஸ்கர், வினோத், பிரபா தண்டபாணி, வாலிபால் மணி, சுவை சுரேஷ், இளந்திரையன், வேலு, சேகர், ராஜேந்திரன், அன்பரசு, அமரஜி, பிரேம், அரவிந்த், தேவா, மணிகண்டன், சித்திக், சுரேஷ் பாபு, சிவமுருகன், பால்ராஜ், ராம், தனசேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Periyar ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்