×

8 ஆண்டாக சீரமைக்கப்படாத குண்டும், குழியுமான பேராலி ரோடு வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

விருதுநகர், டிச. 25: விருதுநகரிலிருந்து பேராலி கிராமங்களுக்கு செல்லும் ரோடு, கடந்த 8 ஆண்டாக குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த ரோட்டை விரைவாகவும், தரமாகவும் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகரில் இருந்து 6 கி.மீ தொலைவில் சின்னபேராலி மற்றும் பெரிய பேராலி ஆகிய இரண்டு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.
கிராம மக்கள் கூலிவேலைக்கும், பொருட்கள் வாங்கவும், மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிக்கும், நோயாளிகள் மருத்துவமனைக்கும் விருதுநகர் வந்து செல்கின்றனர். கிராமங்களில் விளையும் பருத்தி, கடலை, காய்கறி, பூ உள்ளிட்ட விளைபொருட்களை தினசரி விருதுநகருக்கு கொண்டு செல்ல வேண்டும்.

8 ஆண்டாக குண்டும், குழி
இந்நிலையில், விருதுநகரில் இருந்து பேராலி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. விருதுநகர் பேராலி ரோட்டில் நூற்பாலைகள், பேப்பர் கோன் மில்கள், பிளாஸ்டிக் பேக் கம்பெனிகள் உள்ளன. இந்த கம்பெனிகளுக்கு கன்டெய்னர் லாரிகளில் சரக்குகள் வந்து செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பேராலி ரோடு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக குண்டும், குழியுமாக கிடக்கிறது.  விருதுநகரில் இருந்து பேராலி செல்லும் ரோட்டில் மின்விளக்கு வசதியும் இல்லாத நிலையில் குண்டும், குழியுமான ரோட்டில் இரவு நேரங்களில் டூ வீலரில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே,  பேராலி ரோட்டை விரைவாக தரமாக போட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : motorists ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...