×

விருதுநகர் கட்டையாபுரத்தில் வீடுகளுக்குள் வரும் அரிப்புழுக்களால் இம்சை நடவடிக்கைகோரி ஆணையரிடம் மனு

விருதுநகர், டிச. 25: விருதுநகரில் வீடுகளுக்குள் வரும்  அரிப்புழுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் குடியிருப்புவாசிகள் புகார் மனு அளித்துள்ளனர். விருதுநகர் கட்டையாபுரத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டையாபுரம் மடப்புரம் காளியம்மன் கோயில் தெருவில் தனியார் நிலத்தில் உள்ள மரத்தில் அரிப்புழுக்கள் அதிகமாக உள்ளன.

இந்த அரிப்புழுக்கள் மரங்களில் இருந்து தெருவில் நடந்து செல்லும் மக்கள் மீது விழுந்து அரிப்புகளை ஏற்படுத்துகிறது. தெருவில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. குழந்தைகள், சிறுவர்கள் அரிப்புழுக்களால் அவதிப்படுகின்றனர். தெருவில் அரிப்புழுக்கள் வராமல் இருக்கவும், அவைகளை அழிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காளியம்மன் கோயில் தெரு திரவியம் கூறுகையில், தனியார் நிலத்தில் உள்ள கொடிக்கா மரங்களில் அரிப்புழுக்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த புழுக்கள் மரத்தில் இருந்து தொங்கும் நிலையில் தெருவில் செல்லும் நபர்கள் மீது விழுந்து விடுகின்றன. புழு விழுந்த பகுதியில் அரிப்பு ஏற்படுகிறது. புழுக்களை முழுமையாக கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : erosion ,Commissioner of Operations ,Katyapuram ,houses ,Virudhunagar ,
× RELATED உரிமம் புதுப்பிக்க...