கிறிஸ்துவின் பிறப்பு அளவற்ற அன்பின் வெளிப்பாடு தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி

இறைவன் மனித குமாரனாக அவதரித்தார். சகல உலகத்தை படைத்த இறைவன் மனித சமுதாயத்தின்பால் தான் வைத்த எல்லையற்ற அன்பின் நிமித்தமாக இந்த பூமியிலே மனிதனாக அவதரித்த அந்த அதிசயமே கிறிஸ்துமஸ். அன்பே கடவுள். எவனிடத்தில் அன்பு இல்லையோ அவன் தான் படைத்த இறைவனை அறியான் என்பது வேதவாக்கியம். “இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இறைவன் இந்த பூமியிலே மனித குமாரனாக அவதரித்தார் என்ற வேத வாக்கியம் நம்மை தெளிவுபடுத்துகிறது. “தேவன் நம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் என்கிற இந்த வேத வசனம் அவருடைய விவரிக்க இயலாத அன்பை காட்டுகின்றது.

அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது. இருளானது அதை பற்றிக்கொள்ளவில்லை. உலகத்திலே வந்த எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையையும் பிரகாசிக்கச் செய்து நல்ல சாட்சியுள்ள செழிப்பான வாழ்க்கையாக மாற்றுகின்ற ஒளிதான் அந்த மெய்யான ஒளி. இந்த நல்ல நாளிலே நம் நாட்டு மக்கள் யாவரும் அன்பாக ஒருவரை ஒருவர் நேசித்து, பாசம் புகட்டி நல்வாழ்வு வாழ யாவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Related Stories: