×

முனைவர் த.பால்தயாபரன், முதல்வர், பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி. முசிறி, துறையூர் சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

முசிறி, டிச.25: முசிறி, துறையூர் உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிக்கான 1.1.2019ஐ அடிப்படையாகக்கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முசிறி சப்-கலெக்டர் பத்மஜா வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டு பொதுமக்களின் பார்வைக்காக வைக்குமாறு உத்தரவிட்டார். பட்டியல்களை தாசில்தார்கள் முசிறி ஆறுமுகம், தொட்டியம் பன்னீர்செல்வம், துறையூர் அகிலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 549 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 576 பெண் வாக்காளர்களும், 14 இதர வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரத்து 739 வாக்காளர்கள் உள்ளனர்.

முசிறி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட 5,027 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. துறையூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 199 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 592 பெண் வாக்காளர்களும், 9 இதர வாக்காளர்களும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 800 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 6,393 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் வரும் 1.1.2020ஐ அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஜனவரி 4,5,11,12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. பட்டியல் வெளியீட்டின்போது தேர்தல் துணை தாசில்தார், அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : T. Balthayaparan ,Chief Minister ,Bishop ,Trichy ,Heber College ,Thuraiyur Assembly Constituency ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...