×

குளித்தலை ஒன்றிய திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பு

குளித்தலை ,டிச.25: தமிழக உள்ளாட்சித் தேர்தல் கரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 5வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன், 2 வது வார்டு ஒன்றிய கவுன்சில் வேட்பாளர் சாந்தா ஷீலா விஜயகுமார் ஆகியோரை ஆதரித்து கரூர் மாவட்டதிமுக பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி மன தட்டையில் உதய சூரியனுக்கு வாக்குகள் சேகரிக்க வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்துஉற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து செந்தில் பாலாஜி பேசுகையில், குளித்தலை ஒன்றிய உள்ளாட்சி பகுதியில் அடிப்படை வசதிகள் என்பதே இல்லை .இதனால் கிராம பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவது தெரிகிறது. மேலும் ஆளும் அதிமுக அரசு கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கான ஊதியம் வழங்கப்படாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் 4 வருடம் அதிமுக ஆட்சி மத்தியில் ஆளும் மோடி அரசுடன் மண்டியிட்டு வருவதால் எவ்வித பயனும் இல்லாமல் இருந்து வருகிறது. அதனால் வருகிற உள்ளாட்சி தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து திமுக வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் .உங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை அவர்கள் செய்து தருவார்கள் என உறுதியளிக்கிறேன் என்றார்.

இதில் எம்எல்ஏ ராமர், தேர்தல் பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, ஒன்றிய செயலாளர் சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தியாகராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கலைமணி, வக்கீல் நீலமேகம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விஜயகுமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Senthilpologi Vote Collection ,UDF ,
× RELATED உட்கட்சி தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு...