×

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான கராத்தே போட்டி

கோவை, டிச. 25:  அண்ணா பல்கலைக்கழகம் மண்டலங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யுனைடெட்  தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது. அகில இந்திய பல்கலைக்கழக அளவில் கராத்தே போட்டி இந்த ஆண்டு முதல் விளையாட்டு போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 19 மண்டலங்களுக்கு இடையிலான கராத்தே போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழாவில், அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியத்தின் தலைவர் சிவனேசன், துணைத் தலைவர் தங்கராஜ், யுனைடெட் கல்வி குழுமங்களின் தலைவர் சண்முகம், முதல்வர் அமிர்தகடேஸ்வரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், கட்டா, குமித்தே ஆகிய பிரிவுகளில் பல்வேறு எடைப்பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவி திவ்யா, 50 கிலோ எடைப்பிரிவில் ஆர்.வி.எஸ் பொறியியல் கல்லூரி மாணவி மகாலட்சுமி, 55 கிலோ எடைப்பிரிவில் கோவை குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவி பத்மா கணேசன், 61 கிலோ எடைப்பிரிவில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவி தயிரா பேகம் ஆகியோர் வெற்றி பெற்றனர். கட்டா பிரிவில் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி திவ்யா வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் சென்னையை சேர்ந்த காந்திமதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரி மாணவன் கோகுல், 55 கிலோ எடைப்பிரிவில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி சேர்ந்த அர்ஜுன் சீனிவாசனும், 60 கிலோ எடைப்பிரிவில் கிண்டி பொறியியல் கல்லூரி மாணவர் கவுசிக் அரவிந்தன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போட்டியில் தேர்வு  பெற்ற மாணவர்கள் அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டி ஏற்பாடுகளை யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த உடற்கல்வி இயக்குனர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

Tags : Anna University Regional Karate Competition ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...